பெரியகுளத்தில் கூடைப்பந்து போட்டி; சென்னை அணி வெற்றி
பெரியகுளத்தில் நடந்த கூடைப்பந்து போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது.
தேனி
பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை நடைபெற்ற போட்டியில் கொச்சின் கஸ்டம்ஸ் அணியும், சென்னை விளையாட்டு விடுதி அணியும் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 76-70 என்ற புள்ளி கணக்கில் கொச்சின் அணி வெற்றி பெற்றது.
மாலை நடைபெற்ற போட்டியில் சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணியும், புதுடெல்லி இந்திய ரயில்வே அணியும் விளையாடியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் 74-72 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. பின்னர் நடந்த மற்றொரு போட்டியில் திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணியும், சென்னை டி.என்.பி.ஏ. அணியும் விளையாடியது. இந்த போட்டியில் கேரளா போலீஸ் அணி 74-54 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story