கேரளா, கர்நாடகா, தெலுங்கானா அணிகள்


கேரளா, கர்நாடகா, தெலுங்கானா அணிகள்
x

அகில இந்திய அளவிலான கூடைப்பந்து அரை இறுதி போட்டியில் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா அணிகள் இன்று காலையில் மோதுகின்றன. மாலையில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

சேலம்

அகில இந்திய அளவிலான கூடைப்பந்து அரை இறுதி போட்டியில் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா அணிகள் இன்று காலையில் மோதுகின்றன. மாலையில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

கூடைப்பந்து போட்டி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளையொட்டி, தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சேலம் காந்தி விளையாட்டு மைதானம் உள்விளையாட்டு அரங்கில் அகில இந்திய அளவில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாடு, கேரளா உள்பட 8 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

3-வது நாளாக நேற்று மாலை நடந்த முதல் போட்டியில் சத்தீஷ்கார் சாய் அணியும், பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணியும் மோதின. முடிவில், 20-30, 47-59 என்ற செட் கணக்கில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடந்த 2-வது போட்டியில் தெலுங்கானா சவுத் சென்டிரல் ரெயில்வே அணியும், கேரள காவல்துறை அணியும் மோதின. முடிவில், 41-23, 64-47 என்ற செட் கணக்கில் தெலுங்கானா சவுத் சென்டிரல் ரெயில்வே அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து 3-வது நடந்த ஆட்டத்தில் தமிழ்நாடு ரைசிங் ஸ்டார் அணியை கேரள மின்சார வாரியம் அணி தோற்கடித்து வெற்றி பெற்றது. அதன்பிறகு நடந்த 4-வது போட்டியில் மராட்டியம் ஐ.டி.எம் .பல்கலைக்கழக அணியை தோற்கடித்து தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் அணி வென்றது.

அரையிறுதிக்கு தகுதி

இதையடுத்து லீக் சுற்றுகள் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த தெலுங்கானா சவுத் சென்டிரல் ரெயில்வே, பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம், கேரளா மின்வாரியம் மற்றும் கேரளா காவல்துறை ஆகிய 4 அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் தெலுங்கானா சவுத் சென்டிரல் ரெயில்வே அணியும், பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணியும் மோதுகின்றன. அடுத்து நடக்கும் 2-வது அரையிறுதி போட்டியில் கேரளா மின்வாரிய அணியும், கேரளா காவல்துறை அணியும் மோதுகின்றன.

பிற்பகல் 2.30 மணிக்கு 3-ம் பரிசு இடத்துக்கான போட்டியும், அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு இறுதிப்போட்டியும் நடக்கிறது. நிறைவாக பரிசளிப்பு விழா நடக்கிறது.


Next Story