கூடை, கூடையாக குவியும் நாவல் பழங்கள்


கூடை, கூடையாக குவியும் நாவல் பழங்கள்
x

நத்தம் சந்தையில் கூடை, கூடையாக நாவல் பழங்கள் விற்பனைக்காக குவிகின்றன.

திண்டுக்கல்

நத்தம் வத்திபட்டி, பரளிபுதூர், மலையூர், முளையூர், புன்னப்பட்டி, உலுப்பக்குடி, வேலம்பட்டி, செங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான நாவல் மரங்களை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை இந்த நாவல் மரங்களில் இருந்து பழங்கள் பறிக்கப்படுகின்றன. தற்போது நத்தம் பகுதியில் நாவல்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனையடுத்து நத்தம் சந்தைக்கு கூடை, கூடையாக நாவல் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஒரு கிலோ ரூ.160 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. நத்தத்தில் இருந்து மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களுக்கு வேன், பஸ்களில் நாவல் பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து நாவல்பழ விவசாயிகள் கூறுகையில், சர்க்கரை நோய்க்கு நாவல்பழம் அருமருந்தாக உள்ளது. இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு சுவைகளை கொண்ட இந்த பழத்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது தொடங்கியுள்ள நாவல்பழ சீசன், அடுத்த மாதம் (ஆகஸ்டு) வரை நீடிக்கும் என்றனர்.


Next Story