தூய்மை பணிக்கு பேட்டரி ஆட்டோ
கொரடாச்சேரி ஒன்றியத்தில் தூய்மை பணிக்கு பேட்டரி ஆட்டோ
கொரடாச்சேரி:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தூய்மை பணிக்காக பேட்டரி ஆட்டோக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரடாச்சேரி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளுக்கும் பேட்டரி ஆட்டோ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 11 ஊராட்சிகளுக்கு பேட்டரி ஆட்டோக்களை ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்தர் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், இந்த ஆட்டோக்கள் மூலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியே சேகரித்து அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். மேலும் விரைவில் அனைத்து ஊராட்சிகளுக்கும் பேட்டரி ஆட்டோ வழங்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, சுப்புலட்சுமி மற்றும் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.