வாகனங்களில் பேட்டரி திருடிய 2 வாலிபர்கள் கைது


தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு பகுதியில் வாகனங்களில் பேட்டரி திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே அய்யனாரூத்து பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் அக்ரி கணேஷ்குமார் (வயது 21). அதே ஊரிலுள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி(23). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் டிராக்டர், பொக்லைன் ஆகியவற்றில் இருந்த பேட்டரிகளை திருடி வந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்த 20 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story