டிராக்டர்களில் பேட்டரி திருடும் கும்பல்


டிராக்டர்களில் பேட்டரி திருடும் கும்பல்
x
தினத்தந்தி 9 July 2023 2:38 AM IST (Updated: 9 July 2023 5:00 PM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் தொடர்ந்து டிராக்டர்களில் பேட்டரி திருடும் கும்பலை போலீசார் கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் தொடர்ந்து டிராக்டர்களில் பேட்டரி திருடும் கும்பலை போலீசார் கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டரிகள் திருட்டு

திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வரகூர், அம்மையகரம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலில் உழவு செய்து விட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர்கள் உடைக்கப்பட்டு பேட்டரிகள் திருட்டுப்போனது. டிராக்டர்களில் இருந்த டேப் ரெக்கார்டர் , எப்.எம். ரேடியோ போன்ற கருவிகளும் திருட்டுப்போனது.ரூ.10ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகளையும் வாகனத்தில் டீசல் டேங்க் மற்றும் டேப் ரெக்கார்டர் உள்ளிட்டவைகளை உடைத்து சேதப்படுத்தி மர்ம நபர்களும் தொடர் திருட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.

5 டிராக்டர்கள்

இதற்கு முன்பு பூதலூர் பகுதியில் ஒரு கிராமத்திலும் டிராக்டர்களில் பேட்டரிகள் திருட்டு போயிருந்தன. தற்போது திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வரகூர் அம்மையகரம் பகுதியில் 5 டிராக்டர்களில் இருந்து பேட்டரிகளை மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர். இது குறித்து விவசாயிகள் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story