ஆதிநாதர் ஆழ்வார் கோவில் பவுத்ரோத்ஸவம்


ஆதிநாதர் ஆழ்வார் கோவில் பவுத்ரோத்ஸவம்
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் பவுத்ரோத்ஸவம் நடந்தது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

நவதிருப்பதி கோவில்களில் 9-ம் திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆண்டுதோறும் பவுத்ரோத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 5 நாட்கள் பவுத்ரோத்ஸவம் நடந்தது. 8 நாட்கள் நடைபெறுகின்ற உத்ஸவத்தில் 5-ம் நாளான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 7.30 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு சிறப்பு ஹோமம், 11 மணிக்கு பூர்ணாகுதி, நாலாயிர திவ்யப்பிரபந்த சேவைகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, 5.30 மணிக்கு ஹோமத்தை தொடர்ந்து 7 மணிக்கு பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் மாடவீதி புறப்பாடு நடந்தது. நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர், கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Next Story