கடற்கரையில் தூய்மை பணி
கூடங்குளம் அருகே கடற்கரையில் தூய்மை பணிகள் நடைபெற்றது.
திருநெல்வேலி
கூடங்குளம்:
கூடங்குளம் அருகே தோமையார்புரம் பகுதியில் கடற்கரையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியை முன்னாள் எம்.பி. சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் பேசில் ககாரின், பெற்றோர் ஆசிரியர் சங்க செயற்குழு உறுப்பினர் செல்வ பாண்டி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் கூடங்குளம் சுரேஷ்குமார், மாவட்ட பொருளாளர் துரைசாமி, பரமேஸ்வரபுரம் ஊராட்சி செயலாளர் மின்னல், கூத்தங்குழி வினிஸ்டர், மாணவர் அணி துணைச் செயலாளர் தினேஷ் ராஜாராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story