கரடி தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம்


கரடி தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம்
x

முதுமலையில் கரடி தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி

கூடலூர்,

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச்சரகத்தில் நேற்று நீரல்லா வேட்டைத்தடுப்பு முகாமை சேர்ந்த ஊழியர்கள் 4 பேர் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த கரடி வேட்டை தடுப்பு காவலர்களை துரத்தியது. சற்றும் எதிர்பாராத வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், பொம்மன் என்ற வேட்டை தடுப்பு காவலரை கரடி தாக்கியது.

இதில் அவரது இடது கையில் படுகாயம் ஏற்பட்டது. தொடர்ந்து வேட்டை தடுப்பு ஊழியர்கள் சத்தம் போட்டதால் கரடி அங்கிருந்து சென்றது. பின்னர் படுகாயமடைந்த பொம்மனை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story