கரடி தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம்


கரடி தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் ரோந்து சென்ற போது கரடி தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே முதுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட சிக்கள்ளா வேட்டை தடுப்பு முகாம் அருகில் கரடிகுட்டா என்ற இடத்தில் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாலை 3.30 மணிக்கு திடீரென அப்பகுதிக்கு கரடி ஒன்று ஓடி வந்தது. தொடர்ந்து சிவதாஸ் (வயது 47) என்பவரை கரடி தாக்கியது. இதில் அவரது வலது காலில் படுகாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வனஊழியர்கள் சத்தம் போட்டனர். பின்னர் கரடி அங்கிருந்து சென்றது. ஊழியர்கள் ஓடி வந்து சிவதாசை மீட்டு மேல்கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் வனத்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story