உடுமலை நகரில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

உடுமலை நகரில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
x

உடுமலை நகரில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

திருப்பூர்

உடுமலை

உடுமலை நகரில் சுற்றித்திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

பன்றிகள் தொல்லை

உடுமலை நகராட்சி பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட சில இடங்களில் சாலைகளில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து, நகராட்சி பகுதிக்குள் பன்றிகளை வளர்க்கக்கூடாது என்று பன்றி வளர்ப்போருக்கு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. அப்படியிருந்தும் நகராட்சி பகுதியில் ஆங்காங்கு சில இடங்களில் பன்றிகள் சாலை பகுதிகளில் சுற்றித்திரிந்தன.

நகராட்சி நடவடிக்கை

இதைத்தொடர்ந்து, நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும்படி நகராட்சி தலைவர் மு.மத்தீன், நகராட்சி ஆணையாளர் ப.சத்தியநாதன் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்படி பன்றிகளைப்பிடித்து அப்புறப்படுத்துவதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணியில் அனுபவம் வாய்ந்த 10 பேர் நேற்று உடுமலைக்கு வந்தனர்.

அவர்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன், உடுமலை ராமசாமிநகர், டி.ஆர்.என்.கார்டன், வள்ளியம்மாள் காலனி, யு.கே.சி.நகர் உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரிந்த 12 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.

===========

2 காலம்

உடுமலை நகரில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்திய போது எடுத்தபடம்

Next Story