சாலையில் படுத்து வாகனங்களை மறித்த கரடி குட்டி


சாலையில் படுத்து வாகனங்களை மறித்த கரடி குட்டி
x

சாலையில் படுத்து வாகனங்களை மறித்த கரடி குட்டி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்.

கூடலூர்,

கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து அந்த தேசிய நெடுஞ்சாலையில் கரடி குட்டி ஒன்று சில தினங்களுக்கு முன்பு வந்தது. பின்னர் சாலையின் நடுவில் வானத்தை பார்த்தவாறு படுத்தது. இதைக்கண்ட டிரைவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் அப்படியே நிறுத்தினர்.

சிறிது நேரம் படுத்துக் கிடந்த கரடி, தொடர்ந்து எழுந்து அங்குமிங்கும் பார்த்தப்படி சாலையில் நடந்தவாறு சென்றது. இதனை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தொடர்ந்து கரடி குட்டி வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story