மிளிதேன் கிராமத்தில் கரடி நடமாட்டம்


மிளிதேன் கிராமத்தில் கரடி நடமாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மிளிதேன் கிராமத்தில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இங்கு கரடிகள் உலா வந்ததால், கூண்டு வைக்கப்பட்டு, அதில் 2 கரடிகள் சிக்கியது. இந்தநிலையில் தற்போது இரவு நேரங்களில் கரடி ஒன்று கிராமத்திற்குள் புகுந்து நடமாடி வருகிறது. நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு பகுதிக்குள் வந்த கரடியை வளர்ப்பு நாய்கள் விரட்டின. இதனால் கரடி அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. இவ்வாறு வரும் கரடிகளால் மக்கள் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுச் சென்று விடவோ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story