கோத்தகிரியில் மீண்டும் கரடி உலா-பொதுமக்கள் அச்சம்


கோத்தகிரியில் மீண்டும் கரடி உலா-பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் மீண்டும் கரடி உலா-பொதுமக்கள் அச்சம்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள கன்னிகா தேவி காலனி பகுதியில் கரடிகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கன்னிகா தேவி காலனி குடியிருப்புப் பகுதியில் தேயிலைத் தோட்டத்தை ஒட்டிச் செல்லும் நடைபாதையில் கரடி ஒன்று நடமாடிய வண்ணம் உள்ளதுடன் அவ்வழியாக செல்பவர்களைத் தாக்குவதற்காக துரத்தி வருகிறது. மேலும் அந்த கரடி அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால், தேயிலைப் பறிக்கச் செல்லும் தொழிலாளர்களும், அவ்வழியாக குடியிருப்புகளுக்கு செல்லும் பொதுமக்களும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் தொடர்ந்து உலா வரும் கரடி பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன் கரடியைக் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டுச் சென்று விட, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story