ரூ.17 லட்சத்தில் தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தும் பணி


ரூ.17 லட்சத்தில் தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தும் பணி
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோடை சீசனையொட்டி ரூ.17 லட்சத்தில் தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி அடுத்த மாதம் 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. இதையடுத்து ரூ.17 லட்சம் செலவில் தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தும் வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் வடிவிலான இருக்கைகள் அமைப்பது, நீர்வீழ்ச்சியை புதுப்பிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதான பகுதியில் முதல்கட்டமாக ரூ.3 லட்சம் மதிப்பில் தர்ப்பூசணி, பப்பாளி, பைன் ஆப்பிள், பாகற்காய், கேரட் போன்ற வடிவங்களில் 6 இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நுழைவுவாயில் பகுதியில் உள்ள ஜப்பான் பூங்காவில் ரூ.7 லட்சம் மதிப்பில் ஜப்பானிய காஸிபோ எனப்படும் கோபுரம் மற்றும் மீன் வடிவிலான பல வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகள், மலர் கண்காட்சிக்கு முன்பு விரைந்து முடிக்கப்படும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story