அழகிய அய்யனார், சந்திரமதி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு


அழகிய அய்யனார், சந்திரமதி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நரிமணம் அழகிய அய்யனார், சந்திரமதி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் நரிமணத்தில் அமைந்துள்ள அழகிய அய்யனார், சந்திரமதி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 1-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை ஆகியவை நடந்தது. 2-ந்தேதி முதல் கால யாக சாலை பூஜையும், 3-ந்தேதி 2-ம் கால யாகசாலை பூஜைகளும், 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் காலை 6.45 மணிக்கு கடம் புறப்பாடு, 7 மணிக்கு விமானம் மற்றும் மூலவர் குடமுழுக்கு விழாவும், காலை 10 மணிக்கு சந்திரமதி மாரியம்மன் கோவில் விமானம் மற்றும் மூலவர் குடமுழுக்கு விழாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் செய்து இருந்தனர்.


Next Story