கிராமப்புற பெண்களுக்கு அழகு கலை பயிற்சி


கிராமப்புற பெண்களுக்கு அழகு கலை பயிற்சி
x

கிராமப்புற பெண்களுக்கு அழகு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது

ராமநாதபுரம்

தொண்டி

திருவாடானையில் தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சமுதாய திறன் பள்ளி சார்பில் திருவாடானை யூனியனை சேர்ந்த 47 ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முதல் கட்டமாக ஒரு மாத கால அழகு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட கிராம புற பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சியில் புருவம் சரி செய்தல், தலைமுடி திருத்துதல், தேவையற்ற முடிகளை நீக்குதல், முகப்பொலிவு படுத்துதல், மணப்பெண் அலங்காரம், புடவை அலங்காரம், சிகை அலங்காரம், நகம் சுத்தம் செய்தல் போன்ற அழகு கலை தொடர்பான பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திட்ட செயலாக்குனர் சித்திர வேலு கூறியதாவது, 10-ம் வகுப்பு படித்த கிராமப்புற பெண்களுக்கு அழகு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப் பயிற்சி முடித்தவர்களுக்கு திட்டத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் அழகுகலை பொருட்கள் அடங்கிய பெட்டி வழங்கப்படும். அதனை வைத்து பயிற்சி பெற்ற பெண்கள் தங்களது கிராமங்களில் இத்தொழிலை செய்யலாம். தனி நபராகவோ, குழுவாக சேர்ந்தோ அழகு கலை நிலையம் அமைத்து தொழில் செய்ய ஊக்குவிக்கபடுகிறது. இத் தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு வாழ்ந்து கட்டுவோம் திட்டத்தின் மூலம் வங்கி கடன் அல்லது பஞ்சாயத்து அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு மூலம் கடன் உதவி வழங்கவும் ஏற்பாடு செய்து கொடுக்க உள்ளோம். இந்த பயிற்சியின் மூலம் சுயமாக தொழில் செய்யும் அளவிற்கு பெண்களிடம் தன்னம்பிக்கை உருவாகியுள்ளது. கிராமங்களில் அழகு கலை தொழில் செய்வதில் சவால்கள் இருக்கும் அதனை சந்திக்க கூடிய திறனை பயிற்சியின் மூலம் அளித்துள்ளோம். இந்த தொழில் செய்வதின் மூலம் ஒவ்வொருவரின் தனி நபர் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.


Next Story