செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை


செல்போனில் விளையாடியதை கண்டித்ததால்  பிளஸ்-2 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 10 July 2022 8:17 PM IST (Updated: 10 July 2022 8:36 PM IST)
t-max-icont-min-icon

போடியில் செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்

தேனி

போடி குலாளர்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த கருப்பையா மகள் தாரணி (வயது 16). போடியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு செல்போனில் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் மலர் கொடி கண்டித்தார். இதனால் கோபமடைந்த அவர் படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார்.

பின்னர் நீண்ட நேரமாகியும் தாரணி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை திறந்து பார்த்தனர். அப்போது தாரணி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தாரணியை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story