மலைவாழ் பெண்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்


மலைவாழ் பெண்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்
x

கதர் மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் சார்பில் மலைவாழ் பெண்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.

திருப்பத்தூர்

சென்னை கதர் மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம், மாநில அலுவலகம் மற்றும் திருப்பத்தூர் சர்வோதய சங்கம் சார்பில் கலாசிபாளையம், சித்தேரி மலைவாழ் பெண்களின் மேம்பாட்டிற்காக தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் சித்தேரி மலை கிராமத்தில் நடைபெற்றது. கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் பி.என்.சுரேஷ் வரவேற்றார்.

தொடக்க நிகழ்ச்சியாக காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் குத்துவிளக்கு ஏற்றி தேனீ வளர்ப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தென் மண்டல துணை தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எஸ்.பாண்டே தேனீ வளர்ப்பு பற்றி விளக்கி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 20 பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 பெட்டிகள் வீதம் 200 தேனீ வளர்க்கும் பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் அரூர் தொகுதி சம்பத் எம்.எல்.ஏ., திருப்பத்தூர் சர்வோதயா சங்க செயலாளர் சி.லோகநாதன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

இதில் சர்வோதய சங்க அலுவலர்கள், மலைவாழ் மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய உதவி இயக்குனர் சித்ராமதன் நன்றி கூறினார்.


Next Story