பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சி


பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சி
x

பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 466-வது கந்தூரி விழா கடந்த 24-ந்தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. நேற்று மாலை பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சில்லடி தர்கா அருகில் உள்ள கிணறு அருகே சென்று பீர் விரதத்தை முடித்து கொண்டார். பின்னர் அங்கிருந்து கடற்கரை நோக்கி சென்ற பீர் எலுமிச்சை பழத்தை கடல் நோக்கி வீசினார். அங்கு கூடியிருந்தவர்கள் எலுமிச்சை பழத்தை ஆவலோடு பிடித்தனர். இதில் நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் தலைமையில் பரம்பரை டிரஸ்டி சுல்தான் கபீர் சாஹிப் முன்னிலையில் பரம்பரை டிரஸ்டிகள் செய்து இருந்தனர்.


Next Story