முதுமலையில் மரங்களில் தேனீக்கள் கூடுகள்
முதுமலையில் மரங்களில் கட்டிட தேனீக்கள் கூடுகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
நீலகிரி
கூடலூர்
முதுமலை புலிகள் காப்பகத்தில் விலை உயர்ந்த மரங்கள், அடர்ந்த வனம் உள்ளது. மேலும் சிறு வன உயிரினங்கள் முதல் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதுமலை வனம் மற்றும் வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இதில் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை கார்குடி பகுதியில் சாலையோரம் உள்ள பழமையான சில ராட்சத மரங்களில் மட்டும் தேனீக்கள் கூடுகள் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தேனீக்கள் கூடுகள் அதிகமாக உள்ள மரங்களில் தேன் வாசனையும் மூக்கை துளைக்கிறது. இதனால் புது மழைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தேனீக்கள் கூடுகள் அதிகமாக உள்ள மரங்களை கண்டு வியப்படைந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story