பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்ற பெண்களை தேனீக்கள் கொட்டின


பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்ற பெண்களை தேனீக்கள் கொட்டின
x

பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்ற பெண்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்ற பெண்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழாவையொட்டி ணெ்கள் 108 பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். கோவில் அருகே உள்ள ஆலமரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன.

இந்த நிலையில கோவிலில் யாகசாலை தீயில் எழுந்த புகை ஆலமரத்துக்கு பரவியதால் தேனீக்கள் கலைந்தன. அவ்வாறு கலைந்து படையெடுத்த தேனீக்கள் பால்குடங்களு்ன் ஊர்வலமாக வந்த பெண்களை கொட்டின.

இதனால் அலறி அடித்தவாறு ஓடிய பெண்களை விழாக்குழுவினர்அதே ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர் மணிகண்டன் தலைமையில் மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பால்குட ஊர்வலத்தில் வந்த பெண்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story