பீட்ரூட் விளைச்சல் பாதிப்பு


பீட்ரூட் விளைச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாறுபட்ட காலநிலையால் பீட்ரூட் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் போதிய சூரிய வெளிச்சம் இல்லாமல் மேகமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக காய்கறி பயிர்களின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் காய்கறி பயிரிட்டு உள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளதால் அவர்கள் கவலையடைந்து உள்ளனர்.இதுகுறித்து உயிலட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தெரிவிக்கையில், கோத்தகிரி கூக்கல்தொரை, மசக்கல், உயிலட்டி, பனஹட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பீட்ரூட் பயிட்டு இருந்தோம். ஆனால், மாறுபட்ட சீதோஷ்ண காலநிலையால், காய்கறி பயிர்கள் ஒரே சீராக வளராமல் உள்ளது. இதனால் விளைச்சல் வெகுவாக குறைந்து உள்ளது. மேலும் காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கொள்முதல் விலை குறைந்து வருகிறது. கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.28க்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்றார்.


Next Story