ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு சலவை பட்டறை தொழிலாளர்கள் தர்ணா


ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு  சலவை பட்டறை தொழிலாளர்கள் தர்ணா
x

ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு சலவை பட்டறை தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி

ஆண்டிப்பட்டி நகரில் சக்கம்பட்டியில் சலவை பட்டறைகள் உள்ளது. இந்த சலவை பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் மாசு ஏற்படுகிறது என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் சலவை பட்டறைகள் செயல்பட மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது. மேலும் பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வேலையின்றி பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சலவை பட்டறைகளை திறக்க கோரி ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு சக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பட்டறை தொழிலாளர்கள் மற்றும் அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார், தாசில்தார் திருமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சலவை பட்டறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் மாவட்ட கலெக்டரை சந்திக்க உள்ளோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story