கலெக்டர் அலுவலகம் முன்புசத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தேனி
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு மாவட்ட தலைவர் தங்கமீனா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி வரவேற்றார். மாவட்ட செயலாளர் முருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் உடையாளி மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். போராட்டத்தில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும். காலமுறை ஊதியம், அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story