கலெக்டர் அலுவலகம் முன்புஇந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்திய மாணவர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய மாணவர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வேல்பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் பாலா, மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீவர்த்தினி, முத்தமிழன், வதனா மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, வீரபாண்டி, கோட்டூர், ஆண்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தேக்கம்பட்டி, கோட்டூர் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
அரசு பள்ளிகளில் விடைத்தாள் கட்டணம் என்ற பெயரில் தொடர்ச்சியாக வசூல் செய்வதை தடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் புகார்பெட்டி மற்றும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தொலைபேசி எண் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.