நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு முன்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு


நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு முன்பு  சுமை தூக்கும் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு
x

சுமை தூக்கும் தொழிலாளர்கள்

ஈரோடு

ஈரோடு சென்னிமலை ரோடு சேனாதிபதிபாளையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு உள்ளது. இங்கு ரேஷன் பொருட்கள், அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கிடங்கில் 27 பேர் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் 10-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் பணிபுரிய வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கின் முன்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கின் அதிகாரிகளும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story