மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு விடிய, விடிய காத்திருந்த ஆசிரியர்கள்: 2-வது நாளாக நீடித்த போராட்டம்


மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு  விடிய, விடிய காத்திருந்த ஆசிரியர்கள்:  2-வது நாளாக நீடித்த போராட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம் 2-வது நாளாக நீடித்தது.

தேனி

தேனி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் தொடங்கியது. முறைகேடாக வழங்கப்பட்ட பணி மாறுதலை ரத்து செய்து, வேறு ஒன்றியத்துக்கு மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் அதே ஒன்றியத்தில் பணி வழங்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். நேற்று முன்தினம் இரவிலும் இந்த போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு உணவை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டதோடு, விடிய, வீடிய ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். 2-வது நாளாக நேற்றும் ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று இரவு வரையும் இந்த போராட்டம் நீடித்தது. தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


Next Story