கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்புகிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று லிங்கம்பட்டி கிராம மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர்கள் தாசில்தார் சுசீலாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் விரைவில் கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து கிராம மக்கள் ஆர்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story