கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு  அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ேதனி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் 319 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

அதுபோல், கலெக்டர் அலுவலகம் முன்பு, முப்படைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் சரவண புதியவன் தலைமை தாங்கினார். அதேபோன்று, கள்ளர் சீரமைப்பு பள்ளி, கல்லூரி விடுதிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் இணைக்கும் அரசாணையை ரதது செய்யக்கோரி தமிழ்மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் குருநாதன் தலைமை தாங்கினார்.


Next Story