மார்கழி மாத பஜனை தொடக்கம்


மார்கழி மாத பஜனை தொடக்கம்
x

அம்பையில் மார்கழி மாத பஜனை தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

மார்கழி மாதம் நேற்று தொடங்கியதை தொடர்ந்து அம்பை பகுதிகளில் பஜனை குழுவினர் வலம் வந்தனர். மேலும் புது கிராமம் தெருவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில், கிருஷ்ணன் கோவில், காசிநாத சுவாமி கோவில், அரசரடி விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அம்பை கிழக்கு பகுதி சேனைத்தலைவர் பஜனை படத்தில் உள்ள செந்தில் ஆண்டவர் கோவிலில் இருந்து பஜனை குழுவினர் சமுதாய தலைவர் சுப்பையா தலைமையில் வீதி வீதியாக வலம் வந்தனர். இதேபோல் இந்து செங்குந்தர் சமுதாயம் சார்பில் அகஸ்தீஸ்வரர் கோவிலில் பஜனை தொடங்கி அப்பகுதிகளில் வலம் வந்தது. தொடர்ந்து 31 நாட்கள் நடைபெற்று தை பொங்கல் அன்று பஜனை ஊர்வலம் நிறைவுபெறும்.


Next Story