குங்பூ பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பெல்ட், சான்றிதழ்


குங்பூ பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பெல்ட், சான்றிதழ்
x

குங்பூ பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

வாலாஜாவை அடுத்த கீழ்ப்புதுப்பேட்டையில் உள்ள பிரைட் மைன்ஸ் வித்யோதயா பள்ளியில் ஷாவ்லின் வாரியார் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகடாமி பயிற்சி பள்ளி மற்றும் பிரைட் மைன்ஸ் வித்யோதயா சி.பி.எஸ்.இ. பள்ளி இணைந்து நடத்திய குங்பூ பயிற்சியில் கலந்து கொண்டு, பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக பிரைட் மைன்ஸ் வித்யோதயா பள்ளி தாளாளர் நிர்மல் ராகவன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் கருப்பு பட்டயம் வழங்கினார். ஷாவ்லின் வாரியார் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகடாமி கிராண்ட் மாஸ்டர் லீ பவுண்டர் மற்றும் டெக்னிக்கல் டைரக்டர் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சியினை வழங்கினார். அவர்களுடன் சேர்ந்து பெண்கள் சிறப்பு பயிற்சியாளர் யுவராணி மற்றும் மாநில பயிற்சியாளர் ஜி.விஜய் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு குழந்தைகளின் திறமைகளை கண்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை பயிற்சியாளர் ஆர்.கோட்டீஸ்வரன் செய்திருந்தார்.


Next Story