பயனடைந்தவர்கள் பங்குத்தொகை செலுத்த வேண்டும்


பயனடைந்தவர்கள் பங்குத்தொகை   செலுத்த வேண்டும்
x

ஜல்ஜீவன் திட்டத்தில் பயனடைந்தவர்கள் பங்குத்தொகை செலுத்த வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

ஜல்ஜீவன் திட்டத்தில் பயனடைந்தவர்கள் பங்குத்தொகை செலுத்த வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

பங்குத்தொகை

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் அனைத்து ஊரக குடியிருப்புகளுக்கும் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் ஆண்டு இந்த திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் 31 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாய் இணைப்பிற்கு பொதுமக்கள் பங்குத் தொகையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு குக்கிராமங்களுக்கு ரூ.700 மற்றும் பொது பிரிவு குடியிருப்புகளுக்கு ரூ.1,400 செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் இதுநாள்வரையில் தங்களது பொதுமக்கள் பங்குத் தொகையினை செலுத்தாதவர்கள் அதற்கான தொகையினை தங்களது ஊராட்சியில் உள்ள ஊராட்சி கணக்கில் செலுத்தி அதற்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ள வேண்டும்.

49 ஊராட்சிகள் தேர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் 49 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுதோறும் குடிநீர் வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சியில் உள்ள பயனாளிகள் தங்களுக்கான பொதுமக்கள் பங்குத்தொகையினை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில் முன்கூட்டியே செலுத்தி அதற்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story