பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் 4½ மணி நேரம் தாமதம்
நாகர்கோவில் வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் 4½ மணி நேரம் தாமதம்
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் வழியாக கன்னியாகுமரிக்கு ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு மதியம் 2 மணிக்கு வந்து சேருவது வழக்கம். ஆனால் இந்த ரெயில் நேற்று 4½ மணி நேரம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு வந்தது.
ரெயில் தாமதம் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ரெயில் புறப்படும் போது சரியான நேரத்தில் தான் புறப்பட்டது. ஆனால் வழியில் பல்வேறு இடங்களில் சிக்னலுக்காக ரெயில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ரெயிலானது நாகர்கோவில் வந்து சேர தாமதம் ஏற்பட்டது' என்றனர். ரெயில் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story