பெங்களூரு-காரைக்கால் ரெயில் 2 மணி நேரம் தாமதம்


பெங்களூரு-காரைக்கால் ரெயில் 2 மணி நேரம் தாமதம்
x

ரெயில்வே இருப்புபாதை சீரமைக்கும் எந்திரம் பழுது காரணமாக பெங்களூரு-காரைக்கால் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக ஆத்தூர் வந்தது. இதனால் ரெயில் பயணிகள் அவதி அடைந்தனர்.

சேலம்

ஆத்தூர்:

பெங்களூருவில் இருந்து சேலம், ஆத்தூர் வழியாக காரைக்காலுக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மதியம் 2.30 மணிக்கு ஆத்தூரில் இருந்து காரைக்காலுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று தலைவாசல்-சின்னசேலம் இடையே ரெயில்வே இருப்பு பாதையில் மின்சார கம்பிகளை சரிசெய்யும் எந்திரம் பழுதாகி நின்றது. பின்னர் சேலத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு, இருப்பு பாதையை சீரமைக்கும் எந்திரம் இழுத்து செல்லப்பட்டது. இதனால் ஆத்தூரில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட வேண்டிய பெங்களூரு-காரைக்கால் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக மாலை 4.30 மணிக்கு கிளம்பியது. இந்த தாமதத்தால் ஆத்தூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.


Next Story