அகில இந்திய கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன்
விக்கிரமசிங்கபுரம் அருகே நடந்த அகில இந்திய கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே ஆறுமுகம்பட்டி என்.ஒய்.எப்.எப்.சி. அணி சார்பில், 30-வது ஆண்டு அகில இந்திய அளவிலான கால்பந்து போட்டி, சிவந்திபுரத்தில் உள்ள நாடார் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதிப்போட்டியில் கேரளா மணப்புரம் அணியும், பெங்களூரு அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் ஜெகன் தலைமை தாங்கி, முதல் பரிசாக ரூ.25 ஆயிரத்தை பெங்களூரு அணிக்கு வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் சாலமன் டேவிட் 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரத்தை கேரளா மணப்புரம் அணிக்கு வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு பாண்டியன் 3-ம் பரிசாக ரூ.15 ஆயிரத்தை என்.ஒய்.எப்.எப்.சி. 'பி' அணிக்கு வழங்கினார். 4-ம் பரிசாக ரூ.10 ஆயிரத்தை என்.ஒய்.எப்.எப்.சி. 'ஏ' அணிக்கு செபஸ்டின் வழங்கினார்.
விளையாட்டு ஆலோசகர் மனோகரன் சாமுவேல், தொழிலதிபர் மார்ட்டின், நாடார் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் திரவியக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கிரிக்கெட் மூர்த்தி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை என்.ஒய்.எப்.எப்.சி. அணியின் தலைவர் ராமசாமி, செயலாளர் சேர்மகணேஷ், பொருளாளர் சூடாமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.