ஸ்மார்ட் போன் பெறும் பயனாளிகள் தேர்வில் 182 பேர் பங்கேற்பு


ஸ்மார்ட் போன் பெறும் பயனாளிகள்   தேர்வில் 182 பேர் பங்கேற்பு
x

ஸ்மார்ட் போன் பெறும் பயனாளிகள் தேர்வில் 182 பேர் பங்கேற்பு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளிகள், பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. இந்த போன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்படி விண்ணப்பித்தவர்களில் 270 பேருக்கு நேர்காணல் அழைப்பு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேர்காணல் நடைபெற்றது. இதில் 182 பேர் பங்கேற்றனர். முற்றிலும் வாய் பேச முடியாத, காது கேட்காதவர்கள், பார்வைத்திறன் குறைந்தவர்கள் என 2 பிரிவுகளில் நேர்காணல் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி முருகேசன் மற்றும் மகளிர் திட்டம், வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் பங்கேற்று நேர்காணல் நடத்தினார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதன்பிறகு ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள ஸ்மார்ட் போன் தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story