பென்னாத்தூர் பேரூராட்சி கூட்டம்


பென்னாத்தூர் பேரூராட்சி கூட்டம்
x

பென்னாத்தூர் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து செயல்படுத்த கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றன. அதேபோல் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் வார்டு சபா கூட்டங்கள் நடத்த அரசு முடிவு எடுத்துள்ளது.

இதில் கிராம சபை கூட்டம் போல பேரூராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் மக்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களை நடத்த வேண்டும். இதுபோன்ற கூட்டங்களை நடத்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வார்டு குழு கமிட்டி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் அந்தப் பகுதிக்கு தலைவராகவும், மேலும் புதிதாக 3 பேர் நியமனம் செய்து அவர்கள் உறுப்பினராகவும் செயல்படுவார்கள். இந்த கமிட்டி குழுவை சேர்ந்தவர்கள் வார்டு சபா கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனை பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அதன்படி பென்னாத்தூர் பேரூராட்சியில் வார்டு குழு கமிட்டி அமைப்பது தொடர்பாக பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜீவசத்யராஜ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன் வரவேற்றார்.

இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வார்டு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story