பேராவூரணி ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
அனைத்து ரெயில்களையும் நின்று செல்ல வலியுறுத்தி பேராவூரணி ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என வர்தத்கர் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேராவூரணி:
பேராவூரணி நகர வர்த்தகர் கழக அலுவலகத்தில், வர்த்தகர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் திருப்பதி வரவேற்றார். கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் பாரதிநடராஜன், அப்துல்லா, வெங்கடேசன் மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சாதிக் அலி நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-பேராவூரணி ெரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ெரயில்களும் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என ரெயில்வே துறைக்கு பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அனைத்து ெரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை பேராவூரணி ெரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.