சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது


சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருக்கு சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் எஸ்.ஜே.கென்னடியின் சமூக சேவையை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக நெல்லை ஸ்டார் ரோட்டரி கிளப் சார்பில் சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது வழங்கும் விழா நெல்லையில் நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் சதீஷ் நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் பதுரு முஷாமில் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட ரோட்டரி கிளப் கவர்னர் முத்தையா பிள்ளை கலந்துகொண்டு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் எஸ்.ஜே.கென்னடிக்கு சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விருதினை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப்பை சார்ந்த தினேஷ் பாபு, சுந்தர மகாலிங்கம், பவுல் அண்ணா, பிரைட்டன் மதுரம், அயூப் கான், ரைமன்ட் பற்றிக், பத்ரு முசாமில், பரசுராமன், ரங்கராஜ், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென் மண்டல தலைவர் ராம்குமார், தென் மண்டல செயலாளர் இம்மானுவேல், மாநில துணைத் தலைவர் சுதாகர், காயல்பட்டினம் நகர தலைவர் காயல் பாலா, லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story