வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு


வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு
x

வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகளூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாலத்துறையில் உள்ள தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் அசோசியேஷன் மண்டிக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில்

கடந்த வாரம் 104 கவுளி கொண்ட இளம் பயிர் வெள்ளைக்கொடி ஒரு சுமை ரூ.8ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளம் பயிர் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.3 ஆயிரத்துக்கும் விற்பனையானது. 104 கவுளிகொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமைரூ 2,500-க்கும், 104 கவுளி கொண்ட முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ1,300-க்கும் விற்பனையானது. நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.9 ஆயிரத்துக்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.4 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை ரூ.4 ஆயிரத்திற்கும், முதிகால் கற்பூர வெற்றிலை ரூ.1600-க்கும் விற்பனையானது. உற்பத்தி குறைவின் காரணமாக வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story