சூரங்குடியில் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு பெத்தனாட்சி அம்மன் தேர்பவனி
சூரங்குடியில் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு பெத்தனாட்சி அம்மன் தேர்பவனி நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பெத்தனாட்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சப்பரத் தேர் பவனி, கரகாட்டம், வானவேடிக்கை நையாண்டி மேளத்துடன் நடந்தது. சப்பரதேர் பவனியை முன்னிட்டு பெத்தனாட்சி அம்மனுக்கு பல வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது. பின்னர் பெத்தனாட்சி அம்மன் தேரின் வடத்தினை திரளான பக்தர்கள் பிடித்து இழுக்க சப்பர தேர் பவனி நடந்தது. வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் பூ, பழம், தேங்காய், எலுமிச்சை மாலை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story