போடி-தேனி இடையேஇறுதி கட்ட ரெயில் சோதனை ஓட்டம்:29-ந் தேதி நடக்கிறது


போடி-தேனி இடையேஇறுதி கட்ட ரெயில் சோதனை ஓட்டம்:29-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:46 PM GMT)

போடி-தேனி இடையே இறுதி கட்ட ரெயில் சோதனை ஓட்டம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது.

தேனி

மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டப்பணி நடந்து வருகிறது. இதில், தேனி வரை பணிகள் முடிவடைந்ததையொட்டி பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. தற்போது போடி வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 2-ந்தேதி ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. போடியில் இருந்து தேனி வரையிலான 15 கி.மீ. தூர தண்டவாள பாதையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது. அப்போது ரெயில் என்ஜின் 9 நிமிடம் 20 நொடிகளில் 15 கி.மீ. தூரத்தை கடந்தது.

இதையடுத்து தேனி-போடி ரெயில் பாதையில் ரெயில் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா? வேறு ஏதேனும் சிறு குறைபாடுகள் இருக்கிறதா? என்பதை கண்டறிய நவீன ஆய்வு ரெயில் சோதனை ஓட்டம் கடந்த 9-ந்தேதி நடந்தது. அப்போது போடியில் இருந்து தேனி வரை 125 கிலோ மீட்டா் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. இந்நிலையில் போடி-தேனி ரெயில் பாதையில் இறுதிகட்ட ரெயில் சோதனை ஓட்டம் தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையில் வருகிற 29-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story