புதூர்-செங்கோட்டை இடையே ரூ.2.95 கோடியில் சாலை பணிக்கு பூமிபூஜை


புதூர்-செங்கோட்டை இடையே  ரூ.2.95 கோடியில் சாலை பணிக்கு பூமிபூஜை
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

புதூர்-செங்கோட்டை இடையே ரூ.2.95 கோடியில் சாலை பணிக்கு பூமிபூஜை நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் இருந்து செங்கோட்டை வரை பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.2.95 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிக்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு புதூர் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூமி பூஜையை ் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் புதூர் நகர செயலாளர் மருது பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story