சண்முகசுந்தரபுரம்-ஜம்புலிபுத்தூர் இடையேகுண்டும், குழியுமாக மாறிய சாலை:சீரமைக்க வலியுறுத்தல்


சண்முகசுந்தரபுரம்-ஜம்புலிபுத்தூர் இடையேகுண்டும், குழியுமாக மாறிய சாலை:சீரமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சண்முகசுந்தரபுரம்-ஜம்புலிபுத்தூர் இடையேயான சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து வைகை அணை சாலையில் உள்ள ஜம்புலிபுத்தூர் கிராமத்திற்கு இணைப்பு சாலை உள்ளது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் சாலை இருந்த தடமே தெரியாமல் சாலை பெயர்ந்து கற்குவியலாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story