ஆறுமுகநேரியில் பள்ளிகளுக்கு இடையேமாநில சதுரங்க போட்டி


ஆறுமுகநேரியில் பள்ளிகளுக்கு இடையேமாநில சதுரங்க போட்டி
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் பள்ளிகளுக்கு இடையே மாநில சதுரங்க போட்டி நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் நடந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

சதுரங்க போட்டி

ஆறுமுகநேரி பிரீமியர் செஸ் கேர் சென்டர், ரெயின்போ செஸ் அகாடமி ஆகியவை இணைந்து மாநில அளவிலான 11- ம் ஆண்டு சதுரங்க போட்டியை ஆறுமுகநேரி காமராஜ் சோமசுந்தரி நர்சரி - பிரைமரி பள்ளியில் நடத்தின.

இதில் பல மாவட்டங்களை சார்ந்த 30 பள்ளியில் இருந்து 136 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மேலும், பல சர்வதேச பள்ளிகளின் வீரர்களும் கலந்து கொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

தொடக்க விழாவில் ஆறுமுகநேரி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கிளை மேலாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. 1 முதல் 4-ம் வகுப்பு வரை நடைபெற்ற முதல் பிரிவில் ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பள்ளி மாணவன் ஹர்ஷா மித்ரன் முதல் இடத்தையும், கமலாவதி மேல்நிலைப்பள்ளி மாணவன் ஜீனவ்ரேயன் 2-ம் இடத்தையும், திருச்செந்தூர் காஞ்சி சங்கரா பள்ளி மாணவன் மனோபாலன் 3-ம் இடமும் பெற்றனர்.

5-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை நடைபெற்ற பிரிவில் ஆறுமுகனேரி பெர்ல்ஸ் பள்ளி மாணவி தமன்னா, உதயா அர்ஜூன் ஆதித்யா ஆகியோர் முதல் 3 இடங்களையும் பிடித்தனர்.

சாம்பியன்

8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நடைபெற்ற பிரிவு போட்டியில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலை பள்ளி மாணவன் கேரிஷ் ஜேசுரன் முதல் இடத்தையும், ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி மாணவன் விக்னேஸ்வரன் 2-ம் இடத்தையும், ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி கனிகாஸ்ரீ 3-ம் இடத்தையும் பிடித்தனர். கோவை ஐன்ஸ்டின் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்த்த யு.கே.ஜி. மாணவன் ரெமிசன் 4 சுற்று முடிவில் 2.5 புள்ளிகள் பெற்று சிறப்பு பரிசை பெற்றார்.

திருச்செந்தூரின் சங்கரசுப்பு நடுவராக செயல்பட்டார். மாநில அளவில் அதிக புள்ளிகள் பிடித்து ஒட்டு மொத்த

சாம்பியன் பட்டத்தை ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி மாநில அளவில் முதல் இடத்தை பெற்றது.

அதிக மாணவ, மாணவியர் கலந்து கொண்டதற்காக சிறப்பு பரிசை ஆறுமுகநேரி பிரைட் அகாடமி தலைவர் ஜெயசாகருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பிரீமியர் செஸ் கேர் சென்பர் தலைவர் பிரேம்குமார், ரெயின்போ செஸ் அகாடமி தலைவர் முருகச பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினா்.

காமராஜ் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் சாதனா வரவேற்று பேசினார். செயலாளர் முருகன் கூறினார்.


Next Story