முக்காணி-கொற்கை விலக்கு இடையே ரூ.1¼ கோடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
முக்காணி-கொற்கை விலக்கு இடையே ரூ.1¼ கோடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஏரல்:
முக்காணி-கொற்கை விலக்கு இடையே ரூ.1¼ கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சாலைப்பணி தொடக்கம்
ஏரல் அருகே முக்காணி ரவுண்டானா அருகில் இருந்து கொற்கை விலக்கு வரை ரூ.1¼ கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத் தலைவர் பிரம்மசக்தி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம், யூனியன் கவுன்சிலர் பாரத், பஞ்சாயத்து தலைவர்கள் முக்காணி பேச்சீத்தாய், சூழவாய்க்கால் வேங்கையன், பழையகாயல் செல்வகுமார், உமரிக்காடு பஞ்சாயத்து துணைத்தலைவர் பாஸ்கர், ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் கிழக்கு தாசன், மேற்கு நல்லகண்ணு, வடக்கு சொரிமுத்து பிரதாபன், ஏரல் நகர தலைவர் பாக்கர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளம்பெண் குடும்பத்துக்கு நிதியுதவி
ஏரல் அருகே உள்ள சிவகளை நயினார்புரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுடலை வடிவு என்ற தேவராஜ் மகள் சுடலைக்கனி(வயது21). கடந்த மாதம் 6-ந் தேதி உறவினர்களுடன் சிவகளை குளத்தில் குளிக்க சென்ற இடத்தில் சுடலைக்கனியும், கோகிலா என்ற சிறுமியும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இந்த நிலையில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நேற்று மதியம் சிவகளை நயினார்புரத்திலுள்ள தேவராஜ் வீட்டுக்கு சென்றார். அங்கு சுடலைக்கனி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் சுடலைக்கனி குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தி.மு.க. மாவட்ட அவை தலைவர் அருணாசலம், சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதீபா மதிவாணன், கவுன்சிலர் பிச்சையா, விவசாய சங்க தலைவர் மதிவாணன், ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் மேற்கு நல்லகண்ணு, வடக்கு சொரிமுத்து பிரதாபன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.