விழுப்புரம் -ஆறுமுகநேரி இடையேபுறா பந்தயம்
விழுப்புரம் -ஆறுமுகநேரி இடையே புறா பந்தயம் நடந்தது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி ஸ்டார் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் விழுப்புரத்திலிருந்து ஆறுமுகநேரி வரையிலான 455 கிலோ மீட்டர் தூர புறா பந்தயம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 126 புறாக்கள் பங்கேற்றன.
இதில் ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் நடுத்தெரு ஜோஸ் வெனிஸ்டன் என்பவரது புறா 5 மணி நேரம் 11 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து முதலிடம் பெற்றது. இரண்டாவது இடத்தை காயல்பட்டினம் சிங்கித்துறை விமல்புறாவும், , ஆறுமுகநேரி பேயன்விளை புதூர் சரவணன் புறா மூன்றாவது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை கிளப் தலைவர் நாராயணன், செயலாளர் ராஜ், பொருளாளர் பட்டுராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story