பத்ரகாளியம்மன், அய்யன் கோவில் கும்பாபிஷேகம்
மேலூர் அருகே சூரக்குண்டு கிராமத்தில் பத்ரகாளியம்மன், அய்யன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
மேலூர்,
மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு கிராமத்தில் தெற்குவளவு பத்ரகாளியம்மன், பாப்பான்குண்டு அய்யன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முதல் நாள் யாகசாலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலூர் சிவன் கோவில் தட்சிணாமூர்த்தி குருக்கள் கணபதி ஹோமம் செய்து பூஜையை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாலை முதல்கால யாக வேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனையுடன் பூஜை நடைபெற்றது. 2-ம் கால யாக பூஜை தீபாராதனை, மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து பாரம்பரிய வழக்கப்படி கிராம பெரியவர்கள் புனித தீர்த்தத்தை ராஜகோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது கருட பகவான் வானத்தில் வட்டமிட்டு ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வணங்கினர். மூலவர் மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கு மேலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான கல்லம்பட்டி, அரிட்டாபட்டி, அய்யர்பட்டி, தெற்கு தெரு, விநாயகபுரம், புதுசுக்காம்பட்டி, நரசிங்கம்பட்டி, மில்கேட், திருவாதவூர் ஆகிய கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சூரக்குண்டு கிராம தெற்குவளவார்கள் ஏற்பாடு செய்தனர்.