பத்ரகாளியம்மன் கோவில் கரக உற்சவ திருவிழா


பத்ரகாளியம்மன் கோவில் கரக உற்சவ திருவிழா
x

பத்ரகாளியம்மன் கோவில் கரக உற்சவ திருவிழா நடந்தது.

திருச்சி

மலைக்கோட்டை:

திருச்சி மேலசிந்தாமணி பழைய கரூர் ரோடு நாடார் தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் லட்சுமி, விநாயகர், சப்த கன்னிமார்கள், அய்யாளம்மன், அய்யனார் சாமி, சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, இருளப்பசாமி ஆகிய சாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் 65-ம் ஆண்டு கரக உற்சவ திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று மாலை அய்யாளம்மன் படித்துறையில் இருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் வீதி உலா நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு குத்து விளக்கு பூஜை நடைபெறுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை கரகம் ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள்(புதன்கிழமை) கோவிலில் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனை நடைபெற்று காளியம்மனுக்கும், கருப்பு சாமிக்கும் கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 2-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கரகம் ஆற்றுக்கு செல்லுதல், விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


Next Story